தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐபிஎஸ் அதிகாரிகள் அபய்குமார் சிங், ஜி.வெங்கட்ராமன், பாலநாகதேவி எச்.எம்.ஜெயராம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையக ஏடிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் சிபிசிஐடி ஏடிசிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் நிர்வாகப் பிரிவு, காவல் துறை தலைமையக ஏடிஜிபியாக பாலநாக தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த எச்.எம்.ஜெயராம் சென்னை காவல்துறை செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.