Skip to main content

ரெய்டுக்குள்ளான ஈரோடு காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்...!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Transfer to Erode Police

 

ஈரோடு பழையபாளையம் ஓடைமேடு பகுதியில் வசித்து வருபவர் வேல்குமார். மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச்சில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி. கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார்.

 

ஒரு சாதாரண போலீஸ் தான் என்றாலும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என உயர் போலீஸ் அதிகாரிகளே வேல்குமாரை கண்டால் மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். கடந்த 10 வருட அ.தி.மு.க ஆட்சியில் ஈரோடு நகரில் உள்ள காவல்நிலையங்களில் அதுவும் யூனிஃபார்ம் அணியாத தனிப் பிரிவில் மட்டுமே இவர் பணியாற்றி வந்துள்ளார். சட்ட விரோத, சமூக விரோத கும்பல்கள் அனைத்திலும் இவருக்குத் தொடர்பு உண்டு என்றும் அவர்கள் மூலம் பெறும் லட்சக்கணக்கான ரூபாய் மாமூல் பணம் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளது.

 

அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேல்குமாரை கடந்த சில மாதங்களாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், 20-ந் தேதி ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் 10-க்கும் போலீசார் காலை 8 மணிக்கே வேல்குமார் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர் வீட்டில் இருந்த சில முக்கிய ஆவணங்கள், நிலங்கள் மற்றும் அசையா சொத்துகளின் டாக்குமெண்ட்டுகள், வங்கியின் பாஸ்புக், செக்புக் போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

 

வேல்குமார் வங்கியில் டெபாசிட் செய்த பணம், அவரது லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு என பல விபரங்களை வேல்குமாரிடமும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரிடமும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். இவர் வீட்டில் ரகசிய அறைகளில் நகை, பணம் பதுக்கி வைத்துள்ளரா என்றும்  வீட்டின் அனைத்து பகுதிகளிலும் 20-ந் தேதி இரவு வரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஒருவர் வேல்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். வேல்குமாருக்கு சொந்தமான மற்றொரு வீடு  ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் உள்ளது. அங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை வேல்குமார் மீது எடுக்கப்படும் எனவும், சட்டவிரோத கும்பலின் மூலம் பெற்ற வருமானத்தைப் பிரித்துகொண்ட போலீசாரையும் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் ஈரோடு போலீஸ் அதிகாரிகள்.

 

இந்நிலையில், இன்று வேல்குமார் மீது ஈரோடு எஸ்.பி. தங்கதுரை எடுத்த நடவடிக்கையின் பேரில் தனிப்பிரிவிலிருந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை கொடுக்கும் அறிக்கையின் படி அடுத்ததாக சஸ்பென்ட் செய்யப்பட்டு போலீஸ் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என ஈரோடு போலீஸ் வட்டாரம் கூறுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.