Advertisment

தொடரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு

Transfer of continuing IAS officers; Tamil Nadu Government Notification

Advertisment

அண்மையாகவே தமிழகத்தில் பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்திய அறிவிப்பில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக சுங்கபுத்திரா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ், கடலூர் ஆணையாளராக அனுஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அருங்காட்சியகம் இயக்குநர் பொறுப்பிற்கு கவிதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக ரஞ்சித் சிங் ஐஏஎஸ்நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படியாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

TNGovernment transfer
இதையும் படியுங்கள்
Subscribe