8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிவிப்பின்படி போக்குவரத்துத்துறை ஆணையராகசண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சுரங்கத்துறை இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது போக்குவரத்துத் துறை ஆணையராக இருக்கக்கூடிய பணீந்திரரெட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனிமவளத் துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி 8 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.