பல்வேறு துறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவுப்படி வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை ஆணையராகத்திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அச்சு மற்றும் எழுது பொருள் துறை ஆணையராக ஷோபனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மொத்தம் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகள் புதிய துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.