Skip to main content

32 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தலைமைச் செயலாளர் உத்தரவு

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Transfer of 32 IAS Officers

 

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சி குழும (CMDA) தலைமை செயல் அதிகாரியாக நியமனம். தொழில்நுட்ப கல்வி இயக்குநராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எல்காட் (ELCOT) நிர்வாக இயக்குநராக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநராக சங்கரும், இல்லம் தேடிக்கல்வி திட்ட சிறப்பு அதிகாரி இளம்பகவத் பாடநூல் மற்றும் கல்வி கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை நியமனம். சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் குடியேற்றத்தின் இயக்குநராக நியமனம். தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக கோவிந்த ராவ் நியமனம். திருப்பூர் ஆட்சியர் வினீத், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட இயக்குநராக நியமனம்.

 

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், வேளாண் ஆணையராகவும் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கூட்டுறவு சங்க பதிவாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பதிவுத்துறை தலைவராகவும், மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன் கைத்தறித்துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக், சுகாதாரத்துறை சிறப்பு செயலாளராக ரீதா ஹரிஷ் தக்கார், அருங்காட்சியகங்கள் ஆணையராக சுகந்தி நியமனம்; நிதித்துறை இணை செயலாளராக ஹரிஷ்னனுன்னி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு இ-நிர்வாக முகமையின் தலைமை செயல் அதிகாரியாகவும் வணிகவரித்துறை நிர்வாக கூடுதல் ஆணையராக சுப்புலட்சுமியும், மாநில தேர்தல் ஆணையராக கடலூர் ஆட்சியராக இருந்த பாலசுப்பிரமணியம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக சண்முக சுந்தரம்  ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சி ஆட்சியர் ஆர்த்தி, அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் (SSA) இயக்குநராக நியமனம்; உள்துறை கூடுதல் செயலாளராக கஜலட்சுமி நியமனம். நாமக்கல் ஆட்சியர் ஷ்ரேயா சிங், வேளாண்துறை கூடுதல் இயக்குநராக நியமனம். உணவு, கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளராக ராஷ்மி சித்தார்த் ஸகடே நியமனம்.

 

வேளாண் கூட்டுறவு கடன் சங்க சிறப்பு அதிகாரியாக சிவனருள் நியமனம். வேளாண் உழவர் நல சிறப்பு செயலாளராக நந்தகோபால் நியமனம். வணிகவரித்துறை இணை ஆணையராக லக்‌ஷ்மி பாவ்யா தன்னீரு நியமனம். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக சங்கர் நியமனம். மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ள நிவாரணப் பணிகள்; மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Flood Relief Works Appointment of Senior IAS Officers

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல். சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் டி. கார்த்திகேயன் - மாப்பிள்ளையூரணி ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கும்; சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தரேஸ் அகமது ஏரல் - ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பெருநகர போக்குவரத்துக் கழகம் சென்னை லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் - கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், கொற்கை, உமரிக்காடு, மேல மங்கலக்குறிச்சி, பழையகாயல், முக்காணி பகுதிக்கும்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் - ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும்; பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா - வரதராஜபுரம், சிவராம மங்கலம், அப்பன் திருப்பதி, குலசேகர நத்தம், சாமி ஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு பகுதிக்கும்; நகராட்சி நிர்வாகம் இயக்குநர் சிவராசு - திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்திற்கும்; வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் - வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால். மேல ஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Flood Relief Works Appointment of Senior IAS Officers

இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புரனமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையருமான எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார். 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நிவாரண நிதி வழங்க தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Mikjam storm damage; Tamil Nadu IAS officers decided to provide relief funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.