தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 Transfer of 27 IPS officers in Tamil Nadu

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தென் மண்டல ஐ.ஜியாக இருந்த அஸ்ரா கர்க் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார். சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி ஆக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பாலநாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி காமினி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு காவல் ஆணையராக இருந்த சத்யபிரியா சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறாகத்தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe