Transfer of 13 IAS officers; Tamil Nadu Government Notification

அண்மையாகவே தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் இன்று 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடாசலம் ஐஏஎஸ் நில சீர்திருத்தத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். கலையரசி வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு துறை சிறப்புச் செயலாளராக சுகந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை ஆணையராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகக் கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சிறப்புச் செயலாளராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை துணைச் செயலாளராக பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இயக்குநராக சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.