12 வருவாய் மாவட்ட அலுவலர்கள் பணியிட மாற்றம்

 Transfer of 12 Revenue District Officers

தமிழகத்தில் 12 மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நாகை மாவட்ட வருவாய் அலுவலராக பேபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக பால் பிரின்சிலி ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சுகன்யா மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் சென்னை (சமூக வலைதளம்) இணை இயக்குநராக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் மங்களம் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அனிதா கோவை (நில எடுப்பு) விமான நிலைய விரிவாக்க பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தனி மாவட்ட வருவாய் அலுவலராக நெடுஞ்சாலை (நில எடுப்பு மற்றும் மேலாண்மை) ஆனந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவின் பொது மேலாளர்பொற்கொடி மாற்றுத்திறனாளி நல இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகளிர் மேம்பாட்டு கழக பொது மேலாளர் பாரதிதேவி சென்னை வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Announcement TNGovernment transfer
இதையும் படியுங்கள்
Subscribe