/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/T.Rajendar 44444.jpg)
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆனபிறகும் சுங்கசாவடியில் வரி விதிப்பது கண்டனத்துக்குரியது. இதை உடனே ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து சுங்கவரி விதிப்பது மக்களுக்கு எதிரானது.
கமல்ஹாசன் 13 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலில் பயணம் செய்வதாக படித்தேன். இதுவரை அவருக்கு ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லையா? அரசியல் விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தஞ்சையில் வருகிற 9-ந்தேதி எங்கள் கட்சி சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் நான் பங்கேற்கிறேன். இவ்வாறு கூறினார்.
Follow Us