Advertisment

‘தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து’ - ரயில்வே தகவல்

Trains from Tamil Nadu to Delhi are cancelled Railway  Information

Advertisment

வடக்கு ரயில்வே சார்பில் ஆக்ரா கோட்டத்திற்கு உட்பட்ட மதுரா ரயில் நிலையம், மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ரயில்பாதை, சிக்னல் பணிகள், ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வரும் (2024 ஆம் ஆண்டு) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் (வண்டி எண் : 12641) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில் (வண்டி எண் : 12651) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (வண்டி எண் : 12687) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா விரைவு ரயில் (வண்டி எண் : 16787) ரத்து செய்யப்படுகிறது.

அதே போன்று டெல்லியில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வரும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் விரைவு ரயில் (வண்டி எண் : 12642) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை விரைவு ரயில் (வண்டி எண் : 12652) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை விரைவு ரயில் (வண்டி எண் : 12688) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி விரைவு ரயில் (வண்டி எண் : 16788) ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe