Skip to main content

போளூரில் ரயில்களை நிறுத்த வேண்டும்...காங்கிரஸ் எம்பி கோரிக்கை!!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஆரணி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் செயல் தலைவருமான விஷ்ணுபிரசாத் நாடாளுமன்றத்தில் பேசியதாவது

"காட்பாடி விழுப்புரம் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றியதன் நோக்கமே, தூரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தான். அகலரயில்பாதை பணிகள் முடிந்து இரயில்கள் இயங்க தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பணிகள் முடிந்தபின்னர் இந்த தடத்தில் தினமும் 18 ரயில்கள் இயங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதைவிட குறைவாக தான் ரயில்கள் இந்த பாதையில் இயக்கப்படுகின்றன. காட்பாடி  விழுப்புரம் அகல ரயில் பாதையான பின்பு ஆறு பாசஞ்சர் ரயில்கள் காலையில்  மூன்று ரயில்களும், மாலையில் மூன்று ரயில்களும் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக காட்பாடி செல்லும் ரயில்கள் இன்னும் அதே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கின்றன.

trains needs to be stopped polur demands congress MP


இதை தவிர்த்து வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் பாண்டிச்சேரி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ், வாரத்திற்கு மூன்றுமுறை இயக்கப்படும் புதுவை-மும்பை தாதர்எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றன. வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸ் வாரத்தில் ஒருநாள் இயக்கப்படும்,விழுப்புரம் -ஹவுரா, விழுப்புரம் கோரக்கப்பூர், விழுப்புரம் புருலியா இயக்கப்படுகின்றன.

தற்போது  திருச்சி ஹைதராபாத் வாரம் ஒருமுறை புதிய ரயில் இயங்க தொடங்கியுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இயக்கப்படுகிறது. அதேபோல் ஹைதராபாத்லிருந்து ஒவ்வொரு திங்கள் அன்றும் திருச்சிக்கு இயக்கப்படுகிறது. அதேபோல் வாரத்தில் ஒருநாள்இயக்கப்படும் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஹைதராபாத் இயங்கத்தொடங்கியுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு ரயில்களுமே விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. இத்தனை ரயில்களில் இரண்டு ரயில்களை தவிர பெரும்பாலான ரயில்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளுர் ரயில்வே நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மத்திய ரயில்வே வாரியத்தில் முறையிட்டும் அதிவேக இரயில்கள் நிற்பதில்லை.


இந்நிலையில் இதுப்பற்றி ஆரணி பாராளமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களுள் ஒருவருமான விஷ்ணுபிரசாத் கவனத்துக்கு பொதுமக்கள் சார்பில் சிலர் இந்த தகவலை கொண்டு சென்றனர். தற்போது தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. போளுர் மக்களின் கோரிக்கை தொடர்பாக பாராளமன்றத்தில் பேசிய எம்.பி விஷ்ணுபிரசாத், என் தொகுதியில் போளுர் பேரூராட்சியில் மட்டும்மே இரயில்பாதை உள்ளது. அந்த இரயில் பாதையில் செல்லும் அதிவேக ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் சென்னை, காட்பாடி, வேலூர், போளுர் வழியாக திருவண்ணாமலைக்கு இரயில் இயக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன், வரும் நிதியாண்டில் அதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

அதேபோல் திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை வேகமாக செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திண்டிவனம், வந்தவாசி, ஆரணி என என் தொகுதியின் பல பகுதிகள் வளர்ச்சி பெறும், இரயில்வேவுக்கும் அதிக வருவாய் வரும்" எனப் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்முறை, பெண் வெறுப்பு, மத உணர்வு புண்படுத்துதல்” - எம்.பி கடும் விமர்சனம்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Congress MP ranjeet ranjan criticise ranbir kapoor animal movie

அர்ஜூன் ரெட்டி, கபிர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தன்னா, அனில் கபூர், பாபி தியோல், சக்தி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 4 பேர் தயாரித்துள்ளனர். 8 பேர் இசையமைத்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 1ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் ஆலியா பட், த்ரிஷா, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் படக்குழுவை புகழ்ந்து  தள்ளினர்.

இதனிடையே இப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன். நாடளுமன்றத்தில் பேசிய அவர், “என் மகளும் மற்ற குழந்தைகளும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அழுதுகொண்டே பாதியில் தியேட்டரை விட்டு வெளியேறினர். வன்முறை மற்றும் பெண் வெறுப்பை நியாயப்படுத்தும் திரைப்படம். வெட்கக்கேடானது. சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. நாங்கள் அதை பார்த்து வளர்ந்தவர்கள், கபீர் சிங்கில் தொடங்கி புஷ்பா வரை இப்போது அனிமல் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இவ்வளவுக்கும் மேலாக, அதிக வன்முறை மற்றும் பெண்களை துன்புறுத்துதல். இதுபோன்ற விஷயங்களை படங்களில் காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை. 'கபீர் சிங்' படத்தில் அவர் தனது மனைவி, மக்கள், சமூகம் ஆகியவையை எப்படி நடத்துகிறார். அதை அவர் நியாயப்படுத்துவதாகவும் காட்டுகிறார்கள். இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தப் படங்களில் வன்முறை, நெகடிவ் கதாபாத்திரங்கள் வருவது, இன்றைய 11, 12ஆம் வகுப்புக் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதையே முன்மாதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டனர். ஏனெனில் நாம் அதை படங்களில் பார்க்கிறோம், சமூகத்திலும் இதுபோன்ற வன்முறையை பார்க்கிறோம்” என்றார்.

மேலும் பஞ்சாப்பின் போர் கீதமான Arjan Valley பாடலை ரன்பீர் கபூர் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தும்போது பயன்படுத்தப்பட்டது மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
 

Next Story

“சி.ஏ.ஜி., 40% கமிஷன்; மோடி மௌனம் காப்பது ஏன்” - காங்கிரஸ் எம்.பி. கேள்வி 

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

why modi was silent abou bjp's corruption

 

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரை மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

 

கடந்த மே 3ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை அங்கு 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கலவரக்காரர்கள் அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்களைச் சூறையாடி சென்றுள்ளனர். இதனால், அங்கு கலவரம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மணிப்பூர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதில் பேசிய பிரதமர் மோடி, “மணிப்பூர் குறித்து விரிவான விளக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்துவிட்டார். அங்கு அமைதியைக் கொண்டு வர ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்களை விடமாட்டோம். மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதி அளிக்கிறேன்'' என்றார்.

 

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய், “பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை வன்முறையைக் கண்டு வரும் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். மணிப்பூரில் உள்ள மெய்த்தீஸ் மற்றும் குக்கி என இரு பிரிவினருக்கும் இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடக்காத வரை அங்கு அமைதி திரும்பாது. கலவரம் தொடர்பாக முதல்வர் பிரேன் சிங் எடுத்த செயல்பாட்டில் இருபிரிவினரும் மகிழ்ச்சியடையவில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது உள்துறை அமைச்சர் மணிப்பூர் முதல்வரை முழுமையாக ஆதரித்துப் பேசினார். அது அந்த மாநில மக்களுக்கு துரதிர்ஷ்டவசமாக இருந்தது.

 

அமைதி குழுக்களில் முதல்வர் இருப்பது தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது. நிவாரண முகாம்களில் இன்னும் 60,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடித்த 6,000 ஆயுதங்களையும் மீட்கப்படும் வரை அந்த மாநிலத்தில் அமைதி இருக்காது. அதேபோல், முகாம்களில் இருப்பவர்களையும் மீட்க வேண்டும். ஆனால், அதைப் பற்றி பேசாமல் டெல்லி செங்கோட்டையில் இருந்துகொண்டு இந்தியாவை தவறான பாதையில் வழிநடத்துகிறார்.

 

பா.ஜ.க.வினர் செய்யும் ஊழல் விவகாரங்களில் மட்டும் பிரதமர் மோடி மெளனம் சாதிக்கிறார். கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க ஆட்சியில் நடந்த 40 சதவீதம்  கமிஷன் ஊழல் குறித்து புகார் எழுந்தபோதும் மோடி அமைதியாக இருந்தார். சமீபத்தில் சி.ஏ.ஜி அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள பல குறைபாடுகளை வெளியிட்டது. அதில், ஆயிரக்கணக்கான பயனாளிகள் எப்படி ஒரே மொபைல் எண்ணில் இணைக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பியது. அப்போதும் பிரதமர் மோடி அமைதியாக இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்னும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அதற்கும் மோடி அமைதியாகத் தான் இருக்கிறார்.

 

பா.ஜ.க.வுக்கு நேரு மற்றும் காந்தி குடும்பத்தினரை பிடிக்காத காரணத்தினால் நேரு அருங்காட்சியகத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர் நேரு முதல் காந்தி வரை அவர்களது குடும்பத்தினரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால், மக்கள் ராகுல் காந்தி குடும்பத்தினரை விரும்புகின்றனர். பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி ஆகியோரை சந்திக்கிறார். ஆனால், ராகுல் காந்தி காய்கறி விற்பனையாளர்களை சந்திக்கிறார். இதுதான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸுக்கும் வித்தியாசம்.

 

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி இந்திய நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறினார்.