ரயில் டிக்கெட் ரத்து!! முன்பதிவு மையங்களில் பணம் பெறலாம்!

train ticket reservation cancel refund counter open for tomorrow south railway

ஜூன் 30- ஆம் தேதி வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்ப பெற நாளை (05/06/2020) முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை 19 மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மைலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முன்பதிவு மையங்கள் திறக்கப்படுகிறது.

REFUND SOUTH RAILWAY trains cancel
இதையும் படியுங்கள்
Subscribe