Training for volunteers under the Home Search Education Program!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாலைகட்டித்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

Advertisment

இதில், வட்டார வள மேற்பார்வையாளர் இளவரசன், பயிற்றுநர்கள் பாஸ்கர், செங்குட்டுவன், நெப்போலியன், காமாட்சி, பூங்குழலி, கருத்தாளர்கள் ஜெயசீலன், செந்தில், ராஜவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கல்வி தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலத்தில் குழந்தைகளின் கற்றல் குறித்து ஆய்வு செய்தல், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கற்றல் கற்பித்தல், கருவிகள் தயாரித்தல், குழந்தைகளிடம் ஆடல், பாடலுடன் கல்வியை கற்பிப்பது குறித்து விளக்கிக்கூறப்பட்டது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்கநிலை தன்னார்வலர்கள் 59 பேர் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர்.