Advertisment

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்!

Training for school teachers

Advertisment

செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும்,10,11,12 ஆம் வகுப்புமாணவர்களுக்கான துணைத் தேர்வுக்கு, இன்று (18-09-2020)ஆசிரியர்களுக்கு மாவட்டதோரும் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கானதுணைத்தேர்வை செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களை எப்படி வழிநடத்துவது என்று ஆசிரியர்களுக்கு மாவட்ட முழுவதும் 11 மணி அளவில் கல்வி அலுவர்கள் மூலம் சிறப்புப்பயிற்சி அளிக்கப்படது.

அந்தவகையில், சென்னையில் மாநில மகளிர் பள்ளி -எழும்பூர், சிங்காரம்பிள்ளை பள்ளி -வில்லிவாக்கம், எம்.எம்.சி பள்ளி, என மொத்தம் 5 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு, செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, "தேர்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருத்தல் வேண்டும். பள்ளி மாணவர்களிடையே எப்படிச் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும்.

Advertisment

Ad

தேர்வர்கள் தங்களுடன் கிருமி நாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துவந்திருந்தால், அதனைத் தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படவேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா எனக் கண்டறிய வேண்டும்.ஒருவேளை காய்ச்சல்இருந்தால் அவர்களைத்தனியறையில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும். மாஸ்க் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்." என்பன போன்றஅறிவுறுத்தல்கள் இந்தப் பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

teachers schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe