Advertisment

ஆணழகன் போட்டிக்காக கடும் பயிற்சி; ஜிம்மிலேயே ஏற்பட்ட உயிரிழப்பு

Training for the men's competition; A casualty at the gym itself

ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்த இளைஞர் ஜிம்மிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை அம்பத்தூர் மீனாம்பேடு பகுதி சேர்ந்தவர் யோகேஷ் (41). இவர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆணழகன் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவர் அங்கிருந்த குளியல் அறையில் குளிர்ந்த நீரில் குளித்துள்ளார். நீண்ட நேரமாக உள்ளே சென்ற யோகேஷ் வெளியே வராததால் மற்றவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்பொழுது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police Chennai gym
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe