நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் இன்று சென்னை முழுவதும் நடந்தது. முன்னதாக பயிற்சிக்கு வரும் அலுவலர்களுக்கு வெப்பமானியை கொண்டு பரிசோதித்து தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ முகாமும் நடந்தது. சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் சென்னை மாநகர ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன் திப் சிங் நேரில் ஆய்வு செய்தார்.