Skip to main content

ரயிலில் வரும் ஊழியர்களே கேட்களை திறந்து மூடும் அவலம்!

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
rail

 

 ரயில் வரும் முன்பே ரயில்வே கேட்களை மூடி மற்ற வாகனங்களை ரயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டும். ரயில் சென்ற பிறகே கேட் திறக்கப்படும். அதற்கென ஒவ்வொரு கேட்டிலும் ஒரு ஊழியர் இருப்பார். ஆனால் பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் கேட் திறப்பாளர்கள் இல்லாததால் ரயிலை நிறுத்தி அந்த ரயிலில் வரும் ஊழியரே கேட்டை மூடுவதும் மற்றொரு  ஊழியர் மூடிவிடு ரயிலில் ஏறிச் செல்வதுமான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  

rail

 

காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரையிலான ரயில் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் வாரத்தில் சில நாட்கள் மட்டும் ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர் வரையிலான பாதை முழுமையாக அமைக்கப்பட்ட பிறகு தினசரி ரயில்கள் செல்ல உள்ளது.

 


இந்த நிலையில் ரயில் பாதை வேலைகள் முழுமையாக முடிவடையாத நிலையில் பணிகள் முடிந்த பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் தற்போது ரயில் இயக்கப்படும் நிலையில் 6.30 மணி நேரத்திற்கு பயணம் இருந்ததால் பயணிகள் கொந்தளித்தனர். அதனால் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டது. காரைக்குடி பட்டுக்கோட்டை வரை சுமார் 20 கேட்கள் உள்ளது. ஆனால் எந்த கேட்டிலும் கேட் கீப்பர் இல்லை. அதனால் ரயில் எஞ்சின் பகுதியில் வரும் ஊழியர் ரயிலை நிறுத்தி மெதுவாக வந்து கொண்டிருக்கும் போது அவசரமாக கீழே இறங்கி ஓடி கேட்களை மூடிவிட்டு மெதுவாக நகரும் ரயிலில் ஏறிக் கொள்கிறார். அதே போல அதே ரயிலில் கடைசி பெட்டியில் வரும் ஒரு ஊழியர் அவசரமாக இறங்கி ஓடிச் சென்று கேட்டை திறந்துவிட்டு ரயிலின் கடைசிப் பெட்டியில் ஏறிச் செல்கிறார். இந்த காட்சி அறந்தாங்கியில் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

 


   ரயில் இயக்கத் தொடங்கிவிட்ட போதும் கூட கேட் கீப்பரை ரயில்வே நிர்வாகம் நியமிக்காமல் ரயிலில் வரும் ஊழியர்களையே கேட் திறக்க மூட பயன்படுத்துவதால் அந்த ஊழியர்கள் ஓடும் ரயிலில்  ஆபத்தான பணியை செய்கிறார்கள்.
 இந்த நிலை எப்ப மாறும்?

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
 Actor Daniel Balaji passes away

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

TAMIL TV COMEDY ACTOR BALAJI INCIDENT CHENNAI

 

 

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.


விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.

 

இந்நிலையில் வடிவேல் பாலாஜி (வயது 42) உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

மதுரையைச் சேர்ந்த வடிவேல் பாலாஜி, கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.