Advertisment

எழும்பூரில் ரயில்களின் நேரம் மாற்றம்!

Train timings change in Egmore!

சென்னை சென்ட்ரலைத் தொடர்ந்து எழும்பூருக்கு வரும், புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, "திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் மாலை 04.00 மணிக்குப் பதில் 04.05 மணிக்குப் புறப்படும். எழும்பூர் - தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயில் இரவு 07.35 மணிக்குப் பதில் 07.30 மணிக்குப் புறப்படும். மலைக்கோட்டை ரயில் 04.15 மணிக்குப் பதில் 04.10 மணிக்கும், உழவன் ரயில் 04.30 மணிக்குப் பதில் 04.25 மணிக்கும் எழும்பூரை வந்தடையும்.

Advertisment

பாண்டியன் 05.15 மணிக்குப் பதில் 05.10 மணிக்கும், சிலம்பு 05.30 மணிக்குப் பதில் 05.20 மணிக்கும், பொதிகை ரயில் 06.00 மணிக்குப் பதில் 05.50 மணிக்கும் வரும். கன்னியாகுமரி ரயில் 06.15 மணிக்குப் பதில் 06.10 மணிக்கும், அனந்தபுரி ரயில் 08.05 மணிக்குப் பதில் காலை 08.00 மணிக்கும் எழும்பூர் வரும். திருச்செந்தூர் ரயில் காலை 10.45 மணிக்குப் பதில் 10.30 மணிக்கும், வைகை ரயில் மதியம் 02.35 மணிக்குப் பதில் 02.30 மணிக்கும் எழும்பூர் வரும். திருச்சி சோழன் விரைவு ரயில் மாலை 04.50 மணிக்குப் பதில் மாலை 04.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும்" என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

trains
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe