Advertisment

அந்த்யோதயா ரயில் சேவையை குமரி வரை நீட்டிக்க கோரிக்கை

நாளை மறுநாள் தாம்பரம் டூ நெல்லை வரை இயக்கப்படும் முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க ரயில் பயணிகள் மத்திய அரசை கேட்டுள்ளன.

Advertisment

மத்திய நிதிநிலை அறிக்கையின் போது அதிக பயணிகள் செல்லும் ரயில் வழித்தடங்களில் முன்பதிவு இ்ல்லாத அந்த்யோதயா ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உடனே குமரி மாவட்ட மக்கள் அந்த்யோதயா ரயிலை கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டுமென்று ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதோடு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்து கோரிக்கை வைத்தனா்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

குமாரி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமாரி சூப்பா் பாஸ்ட் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் மட்டும் சென்னைக்கு செல்வதால் முன் பதிவு டிக்கெட் கிடைக்காமல் தினமும் குமரி மக்கள் அதிகம் போ் கஷ்டப்படுகின்றனா். மேலும் தினமும் சென்னை செல்வோரின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட இங்கு அதிகமாகும்.

Train service should be extended to Kanyakumari

மேலும் குமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இருப்பதால் குமரி மாவட்டத்தை திருவனந்புரம் கோட்டம் ஓதுக்கி வைத்து தான் பார்க்கிறது. இங்குள்ள ரயில் பயணிகளின் சிரமத்தை அவா்கள் கண்டுக்கொள்வதே என்று பல காலமாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.இதனால் தான் தாம்பரத்தில் இருந்து நெல்லை வர இயக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் அந்த்யோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க திருவனந்தபுரம் கோட்டம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனா்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மேலும் அந்த்யோதயா ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுத்துறை, கும்பக்கோணம், தஞ்சாவூா், திருச்சி வழியாக செல்கிறது. இதை கன்னியாகுமரி வரை நீடித்தால் கன்னியாகுமரியில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு ரயில் இல்லாத குறை தீரும். இந்த நிலையில் மத்திய ரயில்வே மந்திரி வருகிற 8-ம் தேதி அந்த்யோதயா ரயில் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது சொந்த மாவட்டத்துக்கு அந்த ரயிலை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

nellai Train Pon Radhakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe