சென்னையை அடுத்துள்ள எண்ணூர் அருகே உள்ள அத்திப்பட்டு என்ற பகுதியில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையிலான ரயில் பாதையில் உள்ள மின்கம்பி இன்று (20.12.2024) காலை 07.30 மணியளவில் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
காலை நேரத்தில் ரயில் சேவை தடைபட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகம் செல்பவர்களும் மற்றும் மற்ற ரயில் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ரயில் சேவை எப்போது சரியாகும் என பயணிகள் தவித்து வருகின்றனர்.