திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் பானுமதி(66). இவர் கடந்த 2018 மே மாதம் 13ஆம் தேதி எஸ்வந்த்பூர் - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் ஒன்றில் நின்றபோது பானுமதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிக்கொடியை மர்ம ஆசாமி பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

Train incident

Advertisment

Advertisment

இதுகுறித்து கோவை ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் பட்டேல்(34 )என்பவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். இதுகுறித்த வழக்கு கோவை ஜேஎம்சிக்ஸ்(jm6) நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று நீதிபதி கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உத்தம் பட்டேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.