Train drivers struggle against BJP government

Advertisment

ஈரோடு ரயில் நிலையம் அருகே இன்று அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ரயில் ஓட்டுனர்கள் மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து 21 ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சேலம் கோட்ட தலைவர் சந்திரமனோகர் தலைமை தாங்கினார். ஈரோடு கிளை செயலாளர் அருண் குமார் வரவேற்றார். தென் மண்டல துணை தலைவர் முருகேசன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

‘ரயில்வே துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர்கள் இரவு பணிக்கான படியை நிறுத்த கூடாது. ஒட்டுனர்கள் வேலை செய்யும் தூரத்தை அதிகப்படுத்தி வேலை நேரத்தை கூடுதலாக்கக் கூடாது. வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். கரோனாவால் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ரயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்பன பல கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள். ஈரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பங்கேற்றனர். இதேபோல நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.