விழுப்புரத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த யூனிட் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் இருந்த நிலையில் ஆறாவது பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து உடனே ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டியை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காலையில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.