சென்னை சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நள்ளிரவு 01.15 மணி முதல் அதிகாலை 3 மணிவரை நடைபெற்றது. ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.