ரெயில் பயணிகளை கவரும் புதிய முயற்சியாக, 2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் திரைப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

train-and-railway-stations-movies

Advertisment

Advertisment

இந்த சேவையை வழங்க ரயில் டெல் நிறுவனம் பொறுப்பேற்றது. பின்னர் அந்த நிறுவனம் இந்த சேவையை வழங்க ஜீ என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்கோ நெட்வொர்க் நிறுவனத்தை தேர்வு செய்தது.

2022-ம் ஆண்டு முதல் பிரிமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், மெயில்களில் மட்டுமன்றி புறநகர் ரயில்களிலும் சினிமா, பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்பப்படவுள்ளன. வைபை வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.