Advertisment

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகளுடன் ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை சத்தியா நகரை சேர்ந்தவர் பெருமாள் என்பவர். இவர் ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய பேரனுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி பெருமாள், தான் வளர்க்கும் 100 ஆடுகளை வடமதுரையில் இருந்து கொடைரோடு அருகே மெட்டூரில் உள்ள தனது மகள் பொன்வேல் வீட்டில் விட முடிவு செய்தார்.

Advertisment

dindugal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நேற்று, வடமதுரையில் இருந்து திண்டுக்கல் - மதுரை 4 வழிச் சாலை வழியாக 100 ஆடுகளையும் மேய்த்தபடி பெருமாளும், அவரிடம் வேலை பார்க்கும் அழகர் என்பவரும் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 5.15 மணியளவில் கொடைரோடு அருகே மெட்டூர் ரயில்வே தண்டவாளத்தை 100 ஆடுகளுடன் அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது கோவையில் இருந்து நாகர் கோவிலுக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

Advertisment

ரயில் வருவதை பார்த்த பெருமாளும், அழகரும் ஆடுகளை தண்டவாளத்தில் இருந்து விரட்டுவதில் மும்முரமாக இருந்தனர். அந்த ஆடுகள் அங்குமிங்கும் மிரண்டு ஓடின. ஆனால் அதற்குள் ரயில் அந்த பகுதிக்கு வேகமாக வந்தது. இதில் ரயில் மோதியதில் பெருமாளும், அழகரும் தூக்கி வீசப்பட்டனர். தண்டவாளத்தில் நின்ற ஆடுகள் மீதும் ரயில் மோதியது. அதில் 8 ஆடுகள் உடல் சிதறி பலியாகின. படுகாயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொடைரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் கிடந்த அழகரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் ரயில் மோதி பெருமாளும், ஆடுகளும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

dindugal madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe