இன்று பிற்பகல் கோவை ரத்தினபுரி தில்லைநகர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆறுமாத கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தை ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தாய், கைக்குழந்தை மற்றும் வயிற்றில் இருந்த சிசு உட்பட மூன்று பேரும்சம்பவ இடத்திலேயேபலியாகினர். இது தொடர்பாககாவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
அந்த விபத்து நடந்த பகுதியில் கிடந்த மொபைல் போனை கைப்பற்றிய போலிசார் சம்பந்தபட்ட பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்திகேட்டு பதறியடித்து ஓடிவந்த அவரது சகோதிரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் கோவை சின்னத்தடாகத்தை சேர்ந்த மகேஷ்வரி என்பது தெரியவந்தது. மேலும் பி.என் புதூரை சேர்ந்த தனபால் என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட மகேஸ்வரிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துவந்த நிலையில் தற்போது 6 மாத கர்ப்பிணியான அவருக்கும், அவரது கணவர் தனபாலுக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்துவந்தது. இதனால் அம்மாவீட்டில் தங்கியிருந்துள்ளார் மகேஷ்வரி.இன்று காலை கூட கணவர் தனபாலுக்கும் மகேஷ்வரிக்கும் வாக்குவாதம் முற்றியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்நிலையில் அவர் இன்று பிற்பகல் வீட்டிலிருந்து பையில் துணிகளை எடுத்துக்கொண்டு தனது கைக்குழந்தையுடன் புறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்மகேஸ்வரி இப்படி கோரவிபத்தில் சிக்கியிருப்பது தற்கொலையா அல்லது எதிர்பாராத விபத்தாஎன்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தண்டவாளத்தில் தாய் உட்பட வயிற்றில் இருந்த சிசு, ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக சிதைந்து கிடக்கும் புகைப்படங்கள் பரவி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.