train accident incident in viruthachalam

Advertisment

விருத்தாசலம் சேலம் ரயில் பாதையில் சின்னசேலம் செல்லும்அருகில் உள்ளதுபெரிய சிறுவங்கூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். 48 வயதுடையஇவர் மதிமுக கட்சியில் பொறுப்பில் உள்ளவராம். இவர் மட்டுமல்ல இப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ஜாலியாக குழுக்களாக சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மது விருந்து சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படி ஆளரவமற்ற ரயில்வே பாதைகளை பலவிதமாக பயன்படுத்தி வருகிறார்கள் போதை ஆசாமிகள். போதை ஏறியதும் தண்டவாளத்தில் தலைவைத்து சுகமாக படுத்து தூங்குகிறார்கள். அப்படித்தான் கோவிந்தராஜன் ரயில் போக்குவரத்து தான் இல்லையே என்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தூங்கியுள்ளார். ஆனால் சரக்கு ரயில் ஒன்று அவ்வழியே வந்துள்ளது. கோவிந்தராஜன் அருகில் வந்த ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பது தெரிந்ததும் வேகத்தை குறைத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

அது பயன் அளிக்காமல் ரயில் கோவிந்தராஜன் மீது மோதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில் வரவில்லை என்று ரயில் பாதை அருகில் உள்ள கிராம மக்கள் ரயில் பாதையை அலட்சியமா கடப்பது. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு தண்டவாளத்தில் உட்காருவது, தலைவைத்து படுத்து தூங்குவது, குழுக்களாக தண்டவாளத்தில் அமர்ந்து மது சாப்பிடுவது இப்படிப்பட்ட செயல்களை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாப்பது முக்கியம் என்பதை ரயில் பாதையை பயன்படுத்துபவர்கள்ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகளும்,ரயில்வே காவல்துறையினரும்.