Advertisment

கழிப்பிட வசதியில்லாததால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்!

 Tragic incident for a woman due to lack of toilet facilities ... Notice to the Chief Secretary!

கடந்த 5-ஆம் தேதி 'புரெவி' புயல் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வந்த சமயத்தில்,காஞ்சிபுரம் களக்காட்டூரில்உள்ள அரசு வேளாண்விரிவாக்க மையத்தில்இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவந்தமாற்றுத் திறனாளி பெண்ணானசரண்யா, அலுவலகத்தில் கழிப்பிடவசதி இல்லாமல், சிரமப்பட்டு வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், குரூப்தேர்வு மூலம், பணியில் சேர்ந்தசரண்யா, ஏற்கனவே அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை என்பதால், தான் வேலைக்குப் போக விருப்பமில்லை எனவும் கூறிவந்துள்ளார். ஆனால், அரசாங்க வேலை என்பதால் போக வேண்டும்எனப் பெற்றோர்கள் கூறியதை அடுத்து வேலைக்குச் சென்றுவந்துள்ளார் சரண்யா.

Advertisment

தொடர்ந்து மழை பெய்துவந்த அந்தச் சமயத்தில், தவிர்க்க முடியாதசூழலில்,அருகில் உள்ள (சரிவரபராமரிக்கப்படாத) கழிவறையைப் பயன்படுத்தச் சென்றசரண்யா, அங்கு வெறும் ஓட்டை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, செப்டிக்டேங்மீது தெரியாமல்காலைவைத்த நிலையில்,கழிவுநீர்த் தொட்டியில்விழுந்தார்.வெகுநேரம் ஆகியும்அவர்வராததால், ஊழியர்கள் சென்றுபார்க்கையில், கழிவுநீர்த்தொட்டியில்அவரதுகாலணிகள் மிதந்ததைக்கண்டு அதிர்ச்சியுற்று, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர்.

Advertisment

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டசரண்யாஆட்டோ மூலமாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், போகும் வழியிலேயேபரிதாபமாகஉயிரிழந்தார். இந்தச் சம்பவம்அரசு அலுவகங்களில் கழிப்பறைவசதியிருக்கிறதா? இருந்தாலும் அவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வியைஎழுப்பியுள்ளது.மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தசம்பவம் தொடர்பான புகார்கள்எழ, தற்பொழுது, தேசிய மனிதஉரிமைகள் ஆணையம்தலைமைச் செயலாளருக்கு, 6 வாரத்தில்விரிவான அறிக்கை தாக்கல் செய்து, இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Chief Secretary govt office Toilet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe