/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/29_74.jpg)
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள மோதூர் பிரிவு, பனக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி(40). இவரது மகன் வெள்ளியங்கிரி(18). இவர், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பின் பள்ளிக்குச் செல்லாமல் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், அவர் வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். மதுவுக்கு அடிமையானதால் அதை மறக்க முடியாமல் மனம் உடைந்த நிலையில் இருந்த வெள்ளிங்கிரி, கடந்த 6-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணெய்யை குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளியங்கிரியை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளிங்கிரி, சிகிச்சைப் பலனின்றி நேற்று(12.11.2024) உயிரிழந்தார். இதுகுறித்து, பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)