/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_169.jpg)
திருவெற்றியூர் கம்பர் தெருவைச் சேர்ந்த அமிர்தவர்ஷிணி(20) என்பவர் நேற்று முன்தினம்(16.11.2024) தனது வீட்டின் அருகே உள்ள தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பொதுவாகவே அமிர்தவர்ஷிணி தனது தோழியின் வீட்டிற்குச் சென்று அவருடன் பேசி இருந்துவிட்டு பின் தனது வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில்தான், அமிர்தவர்ஷிணி நேற்று முன்தினம் இரவு அமிர்தவர்ஷிணி தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் வருவதற்குத் தாமதமானதால் அமிர்தவர்ஷிணியின் தாயார் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமிர்தவர்ஷிணி வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது தயார் வெளியே சென்றபிறகு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய தாய், மகள் அமிர்தவர்ஷிணி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)