tragic decision taken by  man because woman  away

Advertisment

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியானஇவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போதுஅவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச்சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.