tragic decision taken by the husband due to his wife  separation

திருச்சி மாவட்டம் பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் கோபால்(38). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தோப்பூர் காலனியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் கோபாலை பிரிந்து விஜயலட்சுமி சத்தியமங்கலத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். கோபால் அவ்வப்போது சத்தியமங்கலத்திற்கு வந்து மகனை பார்த்து சென்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபால், தந்தையிடம் மகனை பார்க்க சத்தியமங்கலம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் கோபால் மகனைப் பார்க்க அவரது மாமனார் வீட்டுக்கு சென்றார்.

திடீரென கோபால் விஷத்தை குடித்து வீட்டின் முன்பு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே கோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.