tragic decision taken by girl because the youth torched her for falling  love

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தணியார் கல்லூரில் ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் மாணவியை காதலிப்பதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இது மாணவிக்கும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் தான் கடந்த 26 ஆம் தேதி மாணவி தனியாக இருந்த போது அவரது வீட்டிற்குள் லோகேஷ் நுழைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து லோகேஷை பிடித்தனர். பின்பு அவர்கள் லோகேஷை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் அதிகளவில் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் வீட்டின் அறையில் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோர்கள் திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் லோகேஷை தேடி வருகின்றனர்.

Advertisment