Advertisment

மாட்டு வண்டி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு; மனைவி அதிர்ச்சி!

tragic decision taken by the bullock cart worker in Erode

Advertisment

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(35). மாட்டுவண்டி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை, 4 ஆண் குழந்தை என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜெயபிரகாஷ் வீட்டில் உள்ள அறையில் தூங்கச் சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெயபிரகாஷ் படுக்கையறையில் தூக்கு மாட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயபிரகாஷின் உடலை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரகாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Erode police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe