Advertisment

போக்சோ வழக்கில் கைதான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

The tragic decision taken by the boy arrested in the POCSO case

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் எற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை அருகில் உள்ள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமி 4 மாதம் கருவுற்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமிடம் விசாரித்துள்ளனர். அப்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார்.

Advertisment

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உட்பட ஜெய காளீஸ்வரன் (வயது 19), மதன்குமார் (வயது 19), பரணி குமார் (வயது 21), பிரகாஷ் (வயது 24), நந்தகோபால் (வயது 19) மற்றும் பவா பாரதி (வயது 22) என 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 3 சிறுவர்களின் வயதுகள் முறையே 14, 15 மற்றும் 16 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

The tragic decision taken by the boy arrested in the POCSO case

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்துவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுவர்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நபர்கள் மேலும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கப்பட்டதில் 13 வயதுடைய மற்றொரு சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

police udumalaipettai Tiruppur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe