Advertisment

வீடு கட்ட முடியாத விரக்தி; ரியல் எஸ்டேட் தரகர் எடுத்த துயர முடிவு

nn

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி கிராமம், பாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (50). ரியல் எஸ்டேட் தரகர். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் வெள்ளியங்கிரி, பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையம், பெரியார் வீதியில் வசித்து வரும் தனது சகோதரி ஜோதி (48) என்பவரது வீட்டின் அருகில் கடந்த வருடம் புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தார். இதற்காக வெள்ளியங்கிரி, தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகத் தெரிகிறது. மேலும், வீடு கட்டுவதற்கு அவருக்கு பணம் கிடைக்காததால் வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்றுவிட்டதாம்.

Advertisment

இதனால் கடந்த 6 மாத காலமாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்த வெள்ளிங்கிரி, தான் உயிருடன் இருந்து யாருக்கும் பயனில்லை. எனக்கு திருமணமும் ஆகவில்லை. என்னால் ஒரு வீடு கூட கட்ட முடியவில்லை என தனது சகோதரியிடம் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு 10 மணியளவில் விஷ மாத்திரைகளைத் சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்துள்ளார். அதைக் கண்ட வெள்ளிங்கிரியின் சகோதரி ஜோதியின் மகன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளியங்கிரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

building Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe