Advertisment

அக்கா வீட்டில் தங்கிய தங்கைக்கு நேர்ந்த சோகம்; போலீசார் விசாரணை!

The tragedy of the younger sister who stayed at the older sister's house

சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டைச் சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் (வயது 62) என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்து நேற்று (20.05.2024) தங்கியுள்ளார். இந்தச்சூழலில் செல்லம்மாள் அக்கா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை பூச்சு இன்று (21.05.2024) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Advertisment

இந்தச் சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் செல்லமாளை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்லமாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chengalpattu Investigation police saidapet Chennai
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe