
காதலித்து வந்த இளம் பெண்ணை காதலனே கழுத்தை நெரித்துக் கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் சடலத்தை வீசிய சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் எடக்காடு பகுதியில் பட்டப்படிப்பு முடித்த விசித்திரா என்ற பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அவரது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்த குடிநீர் தொட்டியில் விசித்திரா சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசித்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர் விசாரணையில், ஜெயசீலன் என்ற நபரைக் கைது செய்தனர். விசித்திராவை காதலித்து வந்த ஜெயசீலன் அவர் வேறொருவரைத்திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலன் கயிற்றால் விசித்திராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அவர்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்த தண்ணீர் தொட்டியிலேயே அவரது உடலையும் போட்டுவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜெயசீலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் நீலகிரி எடக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)