
ஃபிரிட்ஜை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது வரகுணராமபுரம். இந்த பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாத நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத் தொழிலாளியான வாணி என்பவர் வழக்கம் போல காலையில் டீ வைப்பதற்காகஃபிரிட்ஜில் இருந்து பாலை எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கிவாணி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கணவர் மாரிமுத்து பலத்த காயமடைந்த வாணியை உடனடியாக மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வாணி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us