Advertisment

தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy for the woman who gave water!

உளுந்தூர்பேட்டை மேற்கு கந்தசாமி புரம் பகுதியில் வசித்து வரும் சிவராமன், அதே நகரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அவரது மனைவி ராஜலட்சுமி வீட்டில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ராஜலட்சுமியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளனர். வழிப்போக்கர்கள் என்று கருதிய அவர் உள்ளே சென்று குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துள்ளார். அப்போது ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள தாலி செயினைப் பறித்துக்கொண்டு அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் பறந்து சென்றனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து ராஜலட்சுமி கணவர் சிவராமன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்து தாலி செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை நகரில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பதும் பெண்களிடம் செயின் அறுப்பது அவ்வப்போது தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக நகர மக்கள் கூறுகின்றனர்.

Advertisment

police ulundurpet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe