/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4802.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், கே. புதுப்பட்டி அருகே உள்ள வாளரமாணிக்கம் ஊராட்சி பகுதியில் இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் ஒரு குழுவினர் திருமயம் பகுதியை அடுத்த போசம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை அவர்கள் வேலை முடித்து வீட்டிற்குக் கிளம்பினர். அப்போது அங்கிருந்து மலைத் தேனீக்களின் கூடு ஒன்று கலைந்துள்ளது. இதனால், மலைத் தேனீக்கள் அங்கிருந்தவர்களைக் கடுமையாகத்தாக்கியுள்ளது.
இந்த நிகழ்வில் 100 நாள் வேலையில் இருந்த 9 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக மீட்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், இரு பெண்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் இருவரையும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருந்த பகுதியில் கிடந்த கழிவுகளுக்கு யாரோ தீ வைத்ததாகவும், அதில் இருந்து வெளியேறிய புகையின் காரணமாக கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்துள்ளன. அதன் காரணமாகவே 100 நாள்வேலையில் இருந்தவர்களை வண்டுகள் கொட்டியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)