Tragedy of a schoolgirl who took abortion pill

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 12 ஆம் வகுப்பு மாணவி. இவர் அரசுப் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இதனிடையே இந்த சிறுமியும், நவினி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனால் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்ட நிலையில் சிறுமி கர்ப்பமானார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து பேசி கருவைக் கலைக்க திட்டமிட்டுள்ளனர். பின்னர் மருத்து கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கு சிறுமி சாப்பிட்டுள்ளார். அதனால் அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர், உடனடியாக மல்லசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில் சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் மருத்துவமனை விரைந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான அரவிந்தை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.