Advertisment

வட மாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Tragedy of North State youth CM MK Stalin's obituary

நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்திற்கு உட்பட்ட பாபுஷா லைன் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இத்தகைய சூழலில் கட்டுமான பணியின் போது இன்று காலை எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) மற்றும் ஜாகீர் (வயது 25) ஆகிய இருவரும் மண்ணில் புதைந்தனர்.

Advertisment

இதனை அறிந்த சக பணியாளர்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தகாவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் மண்ணில் புதைந்த கூலித் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்ணில் புதைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு ரிஸ்வானைபரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்தனர். அதே சமயம் விபத்து நிகழ்ந்த இடத்தின் உரிமையாளர் மேத்யூ (வயது 45), மேற்பார்வையாளர் நசருல்லா (வயது 29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துநிதியுதவியை அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், பாபுஷா லைன் பகுதியில் இன்று 13.03.2024 முற்பகல் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணியின் போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து இருவர் விபத்தில் சிக்கினர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 22) என்பவர் மீட்கப்பட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு அரசின் சார்பாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரை உரிய ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.

Tragedy of North State youth CM MK Stalin's obituary

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும்அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

police Jharkhand nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe