
கள்ளக்குறிச்சியில் நீர் குட்டையில் மனைவி, மகன் சடலமாக மிதந்த நிலையில் அருகில் இருந்த மரத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்.எல்.சி ஊழியர் முத்துக்குமார். இந்த நிலையில் புல்லூர் கல்குட்டை பகுதியில் இருந்த முள் மரத்தில் முத்துக்குமாரின் உடல் தூக்கிட்ட நிலையில் கிடந்தது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை மீட்டனர். அதேபோல அதற்கு அருகிலேயே இருந்த நீர் குட்டையில் முத்துக்குமாரின் மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன் ஆகியோர் சடலமாக கிடந்தனர்.
முத்துக்குமார், தேவி, பிரவீன் ஆகிய மூன்று பேரும் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மரத்தில் தூக்கிட்டநிலையில் இறந்து கிடந்த முத்துக்குமாரின் உடல் மற்றும் ஆடைகள் நனைந்தபடி இருந்ததால் மனைவியும் மகனையும் முத்துக்குமார் குட்டையில் தள்ளிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)