/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_257.jpg)
கல்வராயன் மலையை ஒட்டியுள்ள சங்கராபுரம் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயது வள்ளி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று வள்ளி தனதுமகனுடன் அதே ஊரைச் சேர்ந்த ராதிகா என்பவருடன் சேர்ந்து கொடியனூர் அருகே ஓடும் முஸ்கந்தா ஆற்றில் குளிப்பதற்குச்சென்றுள்ளார். வள்ளி துணிகளைத்துவைத்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளார்.
தண்ணீரில் விழுந்த மகன் தத்தளிப்பதைக் கண்ட வள்ளி மடக்கிப் பிடித்து மகனைக் காப்பாற்றிக் கரையில் நின்றிருந்த ராதிகாவிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் திடீரென நீரின் வேகம் அதிகரித்த நிலையில், வள்ளிக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றுத்தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மகனை மீட்டுக் கொடுத்துவிட்டு தாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தகவலை ராதிகா ஊரில் உள்ளவர்களுக்குத்தெரியப்படுத்தியுள்ளார்.
பின்பு தகவலின் பேரில்வட பொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளியைத்தீவிரமாகத்தேடியதில் இறுதியில் சடலமாக மீட்கப்பட்டார். வள்ளியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)