திருச்சி சோமரசம்பேட்டையைச் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது தாய் தந்தையுடன் ஒப்பந்த அடிப்படையில் வீடு ஒன்றில் இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் ஜெயமோகன்(41) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு ஜெயமோகனின் மனைவி மணிமேகலையும் உடந்தையாக இருந்துள்ளார். அவர், இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி தனது தாயிடம் இது பற்றி கூறி உள்ளார். ஆத்திரம் அடைந்த தாய் இது குறித்து திருச்சி ஜீயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்ததோடு, கணவர் ஜெயமோகனை கைது செய்துள்ளனர்.