Advertisment

சிகரெட் வாங்கி வராததால் சிறுவன் மீது வண்டியை ஏற்றிக் கொலை; கிருஷ்ணகிரியில் சோகம்

Tragedy at Krishnagiri; Police investigation

Advertisment

சிகரெட் வாங்கி வராததால் மது போதையில் இருந்தஇளைஞர் ஒருவர், சிறுவன்மீது இருசக்கர வாகனத்தை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாச்சாலியூர் யாசி நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் நசீமா. கணவனை இழந்து வாழ்ந்த நசீமாவிற்கு மூன்று குழந்தைகள். இவர்கள் குடிசை வீடு ஒன்றில்வசித்து வந்தனர். 14 வயதான மூத்த மகன் முகமது ஷிபான், ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாகப் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டீக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் டீக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் சிகரெட் கேட்டுள்ளார். சிறுவன் சிகரெட் வாங்கித்தராததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி சிறுவனைக் கொலை செய்துள்ளார். இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போதை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவனின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் நசீமாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

police incident Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe