Tragedy happened to the woman who worked in the field

சிதம்பரம் அருகேகீழத்திருக்கழிப்பாளைகிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி(59). இவர் அதே பகுதியில் உள்ள வயலில் வியாழக்கிழமை(10.10.2024) மதியம் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பெய்த காற்று மழையால் பலத்த மின்னல் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.

Advertisment

இவரைஅருகில் இருந்தவர்கள்மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.இவரைபரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர்.இதனைத்தொடர்ந்து இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர்வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Advertisment